இளைஞர்களே ரெடியா! ரத்தன் டாடா இறப்பிற்குப் பின் வந்த அறிவிப்பு.. இத்தனை லட்சம் பேருக்கு வேலையா?
The announcement after the death of Ratan Tata Are there jobs for all these lakhs of people
டாடா குழுமம் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்தின் முக்கிய தலைவர் ரத்தன் டாடா, தனது 86வயதில் அக்டோபர் 9ஆம் தேதி காலமானார். இதையடுத்து, நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். டாடா சன்ஸ் குழுமத்தையும் அவர் தற்போது வழிநடத்தி வருகிறார்.
தற்போது டாடா குழுமம் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் உள்ளிட்ட தொழில்களில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த 5-6 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
சந்திரசேகரன் இதுகுறித்து பேசியபோது, இந்தியாவில் தரமான உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, டாடா குழுமம் மனித வள ஆற்றலாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பினால், டாடா குழுமம் இந்தியாவில் முக்கியமான வேலைவாய்ப்பு துறையாக இருப்பதை உறுதி செய்யும். இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இந்தியாவில் இளைஞர்கள் பெரும்பான்மையாக உள்ளனர், மேலும் வேலைவாய்ப்புகள் அதிகம் தேவைப்படுகிறது.
English Summary
The announcement after the death of Ratan Tata Are there jobs for all these lakhs of people