PFI மற்றும் அதன் எட்டு துணை அமைப்புகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு! தமிழகத்திலும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டது மத்திய அரசின் அறிக்கையில் அம்பலம்! - Seithipunal
Seithipunal


ஆப்ரேஷன் ஆக்டோபஸ் நிறைவு பெற்றதா? அல்லது சோதனைகள் தொடருமா?

நாடு முழுவதும் ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்ற தீவிரவாத தடுப்பு சோதனை கடந்த 22ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு சொந்தமான இடங்களில் சோதனையை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 106 பேர் கைதானார்கள். அதில் 11 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் கேரளா, புதுடெல்லி, தெலுங்கானா உட்பட 15 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது. 

நேற்று இரண்டாம் கட்ட சோதனையானது உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, அசாம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நடைபெற்றது. என்ஐஏ மற்றும் அமலாக்க துறையுடன் மாநில போலீசாரம் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் லேப்டாப் சிடிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதால் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இயக்கங்கள் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை, தீவிரவாத அமைப்புகளில் சேர முயன்றது, தீவிரவாத அமைப்பு ஆதரவாக மக்களை திரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ஆதாரத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரவீன் வசிஷ்டா மத்திய அரசின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளான ஆல் இந்தியா இமாம்ஸ், கவுன்சில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மறுவாழ்வு இந்தியா அறக்கட்டளை, தேசிய மனித உரிமைகள் அமைப்பு, தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, அதிகாரம் இந்தியா அறக்கட்டளை, மறுவாழ்வு அறக்கட்டளை போன்ற அமைப்புகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. 

இந்த அமைப்புகள் வெளி உலக பார்வைக்கு சமூக அமைப்பாகவும் அரசியல் அமைப்பாகவும், கல்வி ரீதியாக ஏற்பாடு செய்யக்கூடிய அமைப்பாகவும் காட்டிக்கொண்டு உள்ளனர். உள்ளுக்குள் அவர்களுக்கு என மறைமுக கோட்பாடுகள் உள்ளன. அக்கோட்பாடு என்னவென்றால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போன்ற விஷயங்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்ற குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வைத்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் "2006 ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பை சிலி அமைப்பு மற்றும் ஜமாத்துல் முஜாபுதீன் பங்களாதேஷ் என்ற தடை செய்ய அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் சர்வதேச அளவில் பயங்கரவாத செயலில் ஈடுபடும் அமைப்புகளுடன் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். 

ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இதன் காரணங்களுக்காக உல்பா சட்டத்தின் மூன்றாவது பிரிவின் படி இந்த அமைப்புகள் சட்டவிரோத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுகிறது" என அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த அமைப்புகள் செயல்பட தேவையான நிதி மற்றும் ஆதரவுகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இதனால் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். நாட்டில் சில மாநிலங்களில் பதிவான கொலை வழக்குகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் அமைப்பினர் சம்பந்தப்பட்ட கொலை வழக்குகளாக உள்ளன. 

குறிப்பாக தமிழகத்தில் 2019ல் கும்பகோணத்தில் நடைபெற்ற பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கிலும் அதே போல் 2016ல் கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The central government has banned PFI and its eight subsidiaries


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->