புதிய 'டொயோட்டோ பார்ச்சுனர்' காரை பயன்படுத்தி டெல்லி சென்ற தமிழக முதல்வர்..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் புதுடில்லி வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு உடனே சென்னை திரும்பிவிட்டார். தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த தினத்தன்று, டில்லியில் வெளியாகும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் தமிழக முதல்வரும்,பிரதமரும் ஒன்றாக நிற்கும் படத்தைப் போட்டு 'செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்ததற்கு பிரதமருக்கு நன்றி' என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இது டில்லியில் அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க வுடன் தி.மு.க. மோதல் போக்கை கடைப்பிடிக்கும் நிலையில், எதற்கு இந்த விளம்பரம் என அவர்கள் கேள்விகளை எழுப்பியதுடன் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதும் இது தான். மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள், பண பரிமாற்ற மோசடி வழக்கில் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர்.

இதனால் தனக்கு பிரச்னை வருமோ என பயந்த மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் 'சரண்டர்' ஆகிவிட்டார். 'திரினாமுல் அமைச்சர்களை ஏதாவது செய்து கொள்ளுங்கள். ஆனால் என்னையும், என் உறவினரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜியையும் எதுவும் செய்யக்கூடாது' என மத்திய அரசிடம், மம்தா கேட்டும் கொண்டாராம்.அடுத்து, மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இது போல தன் குடும்பத்திற்கும், தமிழக அமைச்சர்களுக்கும் பிரச்னை வந்துவிடுமோ என பயந்து ஸ்டாலினும், மம்தா மாடலை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.இதற்கிடையே ஸ்டாலின், பிரதமரை சந்தித்த போது, தான் வெளிநாடு செல்ல இருப்பதாக மோடியிடம் தெரிவித்தாராம்.

மத்திய அரசு இதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும்  உடனே வழங்கிவிட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட டில்லி 'விசிட்'டின் போது அவர் புதிய காரை உபயோகப்படுத்தினார். இதற்காக சென்னையிலிருந்து புத்தம் புதிய 'டொயோட்டோ பார்ச்சுனர்' கார் டில்லி வந்தது. இந்த கார் இனி டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தான் இருக்குமாம். ஸ்டாலின் டில்லி பயணத்தின் போது இந்த காரைத் தான் பயன்படுத்துவாராம்.என்று தெரிவிக்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Chief Minister of Tamil Nadu went to Delhi using the new 'Toyota Fortuner' car..!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->