டெல்லியில் நிலைமை கடும் மோசம்!...காற்றின் அளவில் வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!
The city of delhi is very bad shocking results of the air level
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. நேற்று டெல்லியில் காற்று தரக் குறியீடு 349 ஆக பதிவாகியதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
இதன் காரணமாக, டெல்லியில் காலை நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர்.
இதற்கிடையே, காற்று மாசு பாதிப்பு எவ்வாறு உள்ளது? பொதுமக்கள் காற்று மாசு தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளுக்கு சென்றார்களா? உள்ளிட்டவை குறித்து உள்ளூர் வட்டாரம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், கடந்த 3 வாரங்களில் 40 சதவீத குடும்பத்தினர் மாசு பிரச்சினைகளால் மருத்துவமனைகளுக்கு சென்றது ( 10-ல் 4 குடும்பத்தினர் சுவாசக்கோளாறு, இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்காக ) தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் இந்த விகிதாசாரம் 30 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The city of delhi is very bad shocking results of the air level