தமிழ்நாட்டில் பிரதான கட்சியாக பாஜக உருவேடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - ஜே.பி நட்டா! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவில் பாஜக வலுவாகி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான கட்சியாக உருவெடுக்கும் என பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகர்த்தரத்துறை அமைச்சருமான ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. பிரதமர் நரேந்திர மோடி 3வது பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டார். பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடங்களை கூட கைப்பற்றவில்லை.

கேரளா மாநிலத்தில் திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதனால் பாஜக கேரளா மாநிலத்தில் முதல்முறையாக கால் பதித்தது. பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். கூட்டத்தில் ஜே.பி நட்டா தெரிவித்ததாவது, ஊழல் மற்றும் குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரத்தை பெற பொய்த்த தகவலை பரப்புகின்றன. பாஜகவை வட மாநில கட்சி போல் சித்தரிக்கப்படும் முயற்சிகள் நடைபெறுகிறது.

கேரள மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் எதிரணியாகவும் அகில இந்திய அளவில் உரை அணையாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள்  நிராகரித்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டு நடைபெற்று உள்ள கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்காக காத்திருக்கிறோம் அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிரதான கட்சியாக பாஜக உருவேடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The day when BJP will emerge as the main party in Tamil Nadu is not far JP Natta


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->