காலையிலே பெரும் சோகம்! வயநாடு நிலச்சரிவு 316 பலி! மீட்பு பணி தீவிரம்!
The death toll in Kerala Wayanad landslides has risen to 316
கேரள மாநிலம் வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வயநாட்டின் பல்வேறு இடங்களில் மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பயனடையில் சிறு கட்சிக்கு 200க்கும் மேற்பட்ட பேரின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சமீபத்தில் நாட்களாக கேரளா மாநிலத்தில்பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் யாரும் வெளிய வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தின் மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில்அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி திரட்டும் வகையில் கேரளா முதலமைச்சர் நிவாரணநிதி திறப்பட்டுப்பட்டு வருகிறது. கேரள அரசுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5கோடி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுக சார்பில் ரூ.1 வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், மீட்கப்பட்ட 3500க்கும் மேற்பட்டோர் முகாம்களின் தகவல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை நடத்திய அளவில் மேலும் 23 மாணவர்களை காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
English Summary
The death toll in Kerala Wayanad landslides has risen to 316