மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்.! - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சியில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் கடந்த மே 9-ஆம் தேதி பெற்றோருடன் வந்த மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் சேவை குறைபாடு காரணமாக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The disabled child has been denied in to flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->