சித்தூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டு யானை.! பத்திரமாக மீட்பு.!
The elephant that fell into the well was safely rescued in Andhra
ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் தத்தளித்த காட்டு யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் அருகே காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தவித்துள்ளது. இதையடுத்து யானையின் பிளிறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், யானையை மீட்பதற்கு பல வகைகளில் நீண்ட நேரமாக போராடினர். இருப்பினும் யானையை மீட்க முடியாததால் ஜே.சி.பி. மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்து யானை மேலே ஏறி வருவதற்கு வழி ஏற்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து காட்டு யானை அந்த வழியை பயன்படுத்தி மேலே ஏறிச்சென்று அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் ஓடியது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டது.
English Summary
The elephant that fell into the well was safely rescued in Andhra