3 கோடி ஏழைகளுக்கு வீடு! இந்தியாவை 3வது பொருளாதார நாடாக மாற்றுவதே இலக்கு - பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி  பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்றுக்கொண்டதிலிருந்து அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுக்கொண்டுயுள்ளார். இந்த நிலையில் அரச முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மாஸ்கோவின் ரஷ்யவாழ் இந்தியர்கள் மத்தியில்  பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றிகள். 140 கோடி மக்களின் அன்பை கொண்டு வந்துள்ளேன். கடந்த பத்து ஆண்டுகால இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியப்படைந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் லட்சக்கணக்கான ஸ்டார்ட் ஆப் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும். இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக மாற்றுவது எனது இலக்கு என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The goal is to make India the 3rd largest economy PM Modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->