மருமகளை 6வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம்.....காரணம் இது தானா? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள மும்பாரா பகுதியை சேர்ந்த ஷபீர் முக்தர் ஷேக்கிற்கு திருமணமாகியுள்ளது.  இதற்கிடையேயே ஷபீர் முக்தரின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அவர்களின்  மருமகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி மருமகளுக்கும் ஷபீரின் குடும்பத்தினருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மருமகளை அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து ஷபீரின் குடும்பத்தினர் கீழே தள்ளி விட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அப்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஷபீர் முக்தர் ஷேக் அவரது தாயார், மாமா நூர் முகமது குடும்ப உறுப்பினர்கள் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The horrible incident where the daughter-in-law was pushed down from the 6th floor is this the reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->