தகாத உறவால் நிகழ்ந்த பயங்கரம்!....ஏர்போர்ட்டிற்கு வெளியே காத்திருந்து முன்னாள் மனைவியின் காதலன் கொடூர கொலை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், விமான நிலைய ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் குற்றவாளியை கைது செய்து அவரிடம்  விசாரணை மேற்கொண்டதில்,  கொலை செய்யப்பட்டவருடன் குற்றவாளியின் மனைவிக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதும், இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டியாது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே,கொலையானவர் விமான நிலையத்தில் ட்ரோலி ஆபரேட்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த கொலைக்காக  ஒரு பையில் கத்தியை வாங்கி மறைத்து வைத்து, பஸ்சில் விமான நிலையத்திற்கு சென்ற  குற்றவாளி,  கொலையாளி வேலை முடிந்து வெளியே வரும் வரை காத்திருந்துள்ளார்.

பின்னர் வேலை முடிந்த வெளியே வந்த கொலையாளியை, குற்றவாளி தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The horror caused by an inappropriate relationship The ex wifes boyfriend who was waiting outside the airport was brutally murdered


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->