திருமண செய்துகொள்வதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றிய ஐ.டி. ஊழியர் கைது..! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், பிவாண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி முதல் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

ஐ.டி. ஊழியர் முதலில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைகாட்டினார். இதனால், அவரது பேச்சுக்கு இணங்கியதாகவும், ஆனால், அந்த நபர் தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட ஐ.டி. ஊழியர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 04 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

அத்துடன், குறித்த நபர் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The IT employee who raped the young woman and uploaded private photos on the pretext of getting married has been arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->