உயிரிழந்த மகன்களின் சடலத்தை தோள் மீது வைத்து தூக்கி சென்ற பெற்றோர்! - Seithipunal
Seithipunal


தம்பதியினர் உயிரிழந்த தனது மகன்களின் உடலை தங்களது தோள் மீது தூக்கிக் கொண்டு செல்லும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலியில் உள்ள அஹெரி தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் மகன்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் 2 பேரின்  உடல்நிலை திடீரென மோசமானது. இதனை தொடர்ந்து அடுத்த 1 மணி நேரத்தில் 2 பேரும் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிரை விட்ட  2 சிறுவர்களின் உடலை அவர்களது கிராமத்திற்கு கொண்டு செல்ல முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் தங்கள் இரு மகன்களின் உடலை சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அதன்படி மகன்களின் சடலத்தை சுமார் 15 கிலோமீட்டர் வரை தனது தோளில் சுமந்த சென்றுள்ளனர்.

மேலும், இந்த தம்பதியினர், 10 வயதுக்குட்பட்ட தங்கள் இரண்டு மகன்களின் உடல்களை தோளில் சுமந்து கொண்டு, சேறும் சகதியும் நிறைந்த காட்டுப் பாதையில் தூக்கி கொண்டு செல்லும் வீடியோவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The parents carried the bodies of their dead sons on their shoulders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->