டெல்லி.! கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மூன்று வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்த நிலையில், தரைத்தளத்தில் பல கடைகள் உள்ளன. இதில் முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The roof of the building collapse in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->