அறியாமையில் இண்டியா கூட்டணி கட்சிகள்! " செங்கோல் இந்தியாவின் பெருமை " - யோகி ஆதித்யநாத்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பெருமையான அடையாளங்கள் ஒன்று செங்கோல் என உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமூக வலைதள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

செங்கோல் குறித்து சமாஜ்வாதி எம்.பி ஆர்.கே சௌத்ரி கருத்து தெரிவித்துள்ள நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது குறித்து சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியுள்ளதாவது, இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.

செங்கோல் பற்றிய கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிந்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சியின் அறியாமையை காட்டுகிறது.

செங்கோல் இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து இந்தியர்கள் அனைவருமே பெருமை சேர்த்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The scepter is the pride of India Yogi Adityanath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->