முதலிரவு அறைக்குள் சென்ற மாப்பிள்ளை... கடுப்பில் வெளியேறிய சம்பவம்! - Seithipunal
Seithipunal


முதலிரவு என்பது திருமணமான ஆண் மற்றும் பெண் இருவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத ஒரு தருணமாகும். ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த ஒருவருக்கு அது அதிர்ச்சியான மறக்க முடியாத தருணமாக அமைந்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று இருக்கிறது திருமணத்திற்கான எல்லா சடங்குகளும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை, புதுப் பெண்ணும் முதலிரவு கொண்டாடுவதற்காக  தயாராக இருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றச் சென்ற அந்த தருணத்தில் அந்தப் பெண்ணின் வயிற்றில் தையல் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்திருக்கிறார் புது மாப்பிள்ளை. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் கேட்டபோது அந்தப் பெண் வேறொருவரை காதலித்திருந்ததும் அவர் மூலம் உண்டான கர்ப்பத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதால் தான் அந்த தழும்பு ஏற்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த புது மாப்பிள்ளை தனது மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். அவருடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மணப்பெண் வீட்டார் திருமணமான ஒரு நாளிலேயே மணப்பெண்ணை தாய் வீட்டிற்கு அனுப்பிய மாப்பிள்ளை மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The shock that awaited the new groom in his wife stomach when he went to celebrate the first night


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->