"காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு"! - மாலத்தீவு அதிபர் புகழாரம்! - Seithipunal
Seithipunal


4 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதாவுடன் இந்தியா வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி முகமது முய்சு  விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த நிலையில், அவரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.

பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்வு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி அமைச்சர் ஆகியோரை சந்தித்து முகமது முய்சு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து, தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக  உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமும், உலக அதிசயமுமான தாஜ்மகாலுக்கு தனது மனைவியுடன் முகமது முய்சு வருகை தந்த நிலையில், அவரை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சார்பில், அம்மாநில அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் உற்சாக வரவேற்பு அளித்தார்.


இவரது வருகையை யொட்டி, தாஜ்மகாலில் இன்று காலை 8 முதல் 10 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தனது மனைவியுடன் தாஜ்மகாலை பார்வையிட்ட முகமது முய்சு, அங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

தாஜ்மகாலின் மயக்கும் அழகை வர்ணிப்பது கடினம் என்பதால், வார்த்தைகள் இதற்கு நியாயம் சேர்க்காது என்றும், கட்டிட நுணுக்கம், விரிவான வேலைப்பாடுகளும் காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று, முகமது முய்சு பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The taj mahal is the epitome of romance and architecture praise for the president of maldives


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->