2024-ன் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!...இயந்திர கற்றல் துறையில் சாதனை!
2024 nobel prize in physics announcement.a feat in the field of machine learning
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக விளங்கி வரும் நோபல் பரிசு விருதுகள் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் நடப்பு 2024-ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விருது இவர்கள் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் இந்த நோபல் பரிசானது, செயற்கை நரம்பியல் நெட்வொர்க் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காக அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
2024 nobel prize in physics announcement.a feat in the field of machine learning