மகனின் பிறந்தநாளில் நடந்த சோகம்! மாரடைப்பால் பெண் மரணம்! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் தனது மகனின் பிறந்தநாள் விழாவின்போது தாய் மாரடைப்பால் உயிரிழப்பு. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் வல்சாத் மாவட்டம் வாபி நகரில் உள்ள சர்வாடா பகுதியில் வசித்து வரும் தாவல் பரோட் - யாமினிபென் (37) தம்பதி கடந்த சனிக்கிழமையன்று தங்களது மகனின் 5-வது பிறந்தநாளை அங்குள்ள ஒரு ஹோட்டலில் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். தனது மகனுடன், தாயார் யாமினிபென் மற்றும் தந்தை மேடையில் இருந்தார். அப்போது திடீரென யாமினிபென் மயங்கி விழுந்தார்.

அப்போது, அருகில் இருந்தவர்கள் மற்றும் அவரது கணவர், யாமினிபென்னை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனைக்குப் பிறகு யாமினிபென் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம், குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த சூழலை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் காட்சி அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளில், மேடையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் நடனமாடி கொண்டுள்ளனர். பின்னர், பிறந்தநாள் சிறுவனின் தாயார் யாமினிபென் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மேடையில் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது திடீரென்று, யாமினிபென் தனது கணவரின் தோளில் தலை சாய்த்து மேடையில் சரிந்து விழுந்த காட்சிகள் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The tragedy that happened on the sons birthday Woman dies of heart attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->