டெல்லியில் உச்சத்தை தொடும் தண்ணீர் பற்றாக்குறை !!
the water crisis in delhi reached sky high
இந்த கோடை வெப்பத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், தேசிய தலை நகர் டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்து கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர், சில சமயங்களில் மக்கள் டேங்கர்களில் இருந்து தண்ணீரை சேகரிக்க நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.
பக்கத்துக்கு மாநிலம் ஹரியானாவிலிருந்து ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன்கள் குறைந்ததால், தேசிய தலைநகரில் உள்ள 28,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்று தண்ணீர் கிடைக்காது என டெல்லி நீர் அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
தற்போது தெற்கு டெல்லியின் போகலில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை போக்க காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிஷி, தலை நகர் டெல்லியைச் சேர்ந்த 28 லட்சம் மக்களுக்கு அண்டை மாநிலமான ஹரியானாவில் இருந்து தண்ணீர் கிடைக்காத வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறினார்.
ஒருநாளைக்கு டெல்லிக்கு மொத்தம் 1005 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவைப்படுகிறது, அதில் 613 மில்லியன் கேலன்கள் பக்கத்துக்கு மாநிலம் ஹரியானாவில் இருந்து பெறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, இந்த சப்ளை கணிசமாக குறைந்துள்ளது, 513 மில்லியன் கேலன் தண்ணீர் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஒரு மில்லியன் கேலன் தண்ணீர் 28,500 பேருக்கு சேவை செய்கிறது, எனவே ஹரியானா 100 மில்லியன் கேலன்கள் குறைவாக தண்ணீர் கொடுத்தால், 28 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு தண்ணீர் பெறவில்லை என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹரியானா மாநிலம் 110 மில்லியன் கேலன்கள் குறைந்த தண்ணீரை டெல்லிக்கு அனுப்பியது. இதனால் 28 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இன்று தண்ணீர் கிடைக்காது" என்று அவர் தெரிவித்தார்.
டெல்லியின் உரிமையான தண்ணீரைப் பெற நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன், ஆனால் ஹரியானாவின் பாஜக அரசு இணங்கவில்லை. காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை, ”என்று அதிஷி தெரிவித்தார்.
English Summary
the water crisis in delhi reached sky high