2021 திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூல்.! ஆத்தி., இம்புட்டு கோடி ரூபாயா?! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூல், கடந்த 2021ம் ஆண்டில் 833.41 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதும், உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். 

திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டவர்களும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். 

இதேபோல், நம் தமிழகத்திலிருந்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை வசூல் அதிகமாகவே இருக்கும்.

இது ஒவ்வொரு ஆண்டும் எண்ணப்பட்டு, எவ்வளவு காணிக்கையாக வந்துள்ளது என்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வரும். 

அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு மொத்தமாக 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் ஆறுகோடி லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பக்தர்கள் அளித்த காணிக்கை உண்டியல் வருமானமாக 833.4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் 1.37 கோடி பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 88.75 லட்சம் பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்று, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUPATHY KOVIL UNDIYAL VASUL


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->