பெரும் சோகம்! மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து பலியான அப்பா,அம்மா,மகன் 3 பேர்!
Three people from the same family were killed in electric shock in Telangana state
தெலுங்கானா மாநிலத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஜக காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி மாதாவி. இவரது மகன் ஹரி கிருஷ்ணன். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையில் அனைவரும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூங்கி எழுந்த வெங்கடேசன் குளிப்பதற்காக கழிவறை சென்றதாக கூறப்படுகிறது. வெங்கடேசன் குளியல் அறையில் உள்ள சுட்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் அவரை தாக்கியதாக கூறப்படுகிறத.மின்சாரம் தாக்கிய அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் ஓடி சென்றுள்ளனர்.
அவரை காப்பாற்று அவரது கையை பிடித்து இழுத்த போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த வீட்டின் வேலைக்காரன் வீட்டு கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பேரும் குளியலறையில் இறந்து கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெரில் அங்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் குளியலறையில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Three people from the same family were killed in electric shock in Telangana state