மாடுகளைத் தொடர்ந்து ஆடுகளைக் குறி வைத்த வந்தே பாரத் ரெயில் - ஆத்திரத்தில் கற்களை வீசிய 3 பேர் கைது.!
three peoples arrested for attack vande barat train in uttar pradesh
மாடுகளைத் தொடர்ந்து ஆடுகளைக் குறி வைத்த வந்தே பாரத் ரெயில் - ஆத்திரத்தில் கற்களை வீசிய 3 பேர் கைது.!
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி புதுடெல்லி - வாரணாசி இடையே ஆரம்பமானது. இதைத் தொடர்ந்து வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோரக்பூர்-லக்னோ நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 7ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வந்தே பாரத் ரெயில் அயோத்தி அருகே உள்ள சோஹாவால் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது ரெயில் மீது கற்களை வீசியுள்ளனர். இதில் ரயில் பெட்டியின் இரண்டு கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இருப்பினும் ரெயில் லக்னோ வரை இயக்கபட்டது.
ரெயில் மீது கல் வீசப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், "வந்தே பாரத் ரெயில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று நன்ஹு பாஸ்வான் என்பவரின் ஆடுகள் மீது ஏறியதால் பாஸ்வானும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வந்தே பாரத் ரயில் மீது கற்களை எறிந்து சேதப்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பாஸ்வான் மற்றும் அவரது மகன்கள் அஜய், விஜய் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். ஆடுகள் மீது ரயில் மோதியதால் கற்களை எரிந்த சம்பவம் ரயில்வே ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
English Summary
three peoples arrested for attack vande barat train in uttar pradesh