நாடாளுமன்றத்தில் அத்துமீறிய 3 பேர் - அதிரடி காட்டிய CISF அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


​​நாடாளுமன்ற மாளிகையின் ஃபிளாப் கேட் நுழைவுப் பகுதியில், CISF அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கமான பாதுகாப்பு மற்றும் அடையாளச் சோதனைகளில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற மூன்று பேரை CISF அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவர்களின் ஆதார் அட்டைகளை மேலும் ஆய்வு செய்ததில் அது போலியானது என்று தெரியவந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், கைதான மூன்று பேரும் காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என்று அடையாளம் காணப்பட்டனர். மேலும், அவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் எம்பியின் ஓய்வறையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ள டீ வீ ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் போலி மற்றும் ஏமாற்றுதல் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தின் முழுப் பாதுகாப்பையும் சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி போலீஸ் படைகளுக்குப் பதிலாக சிஐஎஸ்எஃப் பொறுப்பேற்ற சில நாட்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for come to parliment with duplicate id proof


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->