கர்நாடகாவில் கள்ளநோட்டு வழக்கில் சிக்கிய தமிழர்கள் - முப்பது ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட சம்பவம்..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ரவி, சிவகாசி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூவேந்திரன் உள்ளிட்ட மூன்று பேரும் 1993-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். 

அப்போது, அவர்கள் கள்ளநோட்டைப் புழக்கத்தில் விட்டதாக கூறி கர்நாடக மாநில போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். 

அதன் பின்னர் இந்த வழக்கு மீதான விசாரணைக்கும் ஆஜராகாமல் மூன்று பேரும் தலைமறைவாகினர். இவர்களைக் கர்நாடக போலீஸார் தேடி வந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அவர்களுடைய சொந்த ஊர்களில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில், விருதுநகர் மாவட்ட தனிப்படை போலீஸார், முப்பது ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மூன்று போரையும் கைது செய்து கர்நாடக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கள்ள நோட்டு மாற்றிய கும்பல் தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for fake money issue after thirty years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->