ஓட்டல் மாடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக சிக்கிய வடமாநில வாலிபர்கள்.!
three peoples arrested for harassment case in banglore
கர்நாடகா மாநிலம் கோரமங்கலாவில் உள்ள ஒரு ஓட்டலில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது:- "பாதிக்கப்பட்ட பெண் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வேலைக்காக சென்றிருந்தபோது 4 பேர் அந்த பெண்ணை அணுகி இரவு உணவு சாப்பிட அருகில் உள்ள ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அதன் படி வந்த அந்த பெண்ணை ஓட்டலின் மாடிக்கு அழைத்து சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியவுடன் தனக்கு நடந்தது குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரைக்கும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
three peoples arrested for harassment case in banglore