கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் - மனைவி செய்த கொடூர செயல்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகாப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் - ஷிவானி தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷின் நண்பர் ராமாராவ் அடிக்கடி ரமேஷின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது இவருக்கும் ரமேஷின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ரமேஷ் நண்பர் ராமாராவையும், மனைவியையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமாராவ் மற்றும் ஷிவானி இருவரும் ரமேஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 1 ம் தேதி பணிமுடிந்து வீட்டிற்கு வந்த ரமேஷ்க்கு மனைவி ஷிவானி மது ஊற்றி கொடுத்துள்ளார். இதில் போதை தலைகேறியதால் ரமேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து ஷிவானி ராமாராவுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

உடனே ராமாராவ் தனது தோழி நீலா என்பவரை உதவிக்கு அழைத்து வந்துள்ளார் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ரமேஷை கொலை செய்துள்ளனர். மறுநாள் காலை தங்களது உறவினர்களுக்கு ஷிவானி ஃபோன் செய்து கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரமேஷின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குறி போலீசில் புகார் அளித்துள்ளனர் அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், ரமேஷ் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வருவதும் சிறிது நேரத்திலேயே ராமாராவ் மற்றும் நிலா வருவதும் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஷிவானியின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அப்போது சிவானி சம்பவத்தன்று காதலன் ராமாராவுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவானி கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.  இதைத்தொடர்ந்து போலீசார் சிவானி ராமாராவ் மற்றும் நீலா உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து செய்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for kill man in adira


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->