மாணவர்களின் கையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி நூதன தண்டனை - சத்தீஸ்கரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கோண்டகான் மாவட்டத்தில் கெர்வாஹி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பழங்குடி மாணவர்கள் சுமார் 70 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் நேற்று முன்தினம் பணிபுரியும் ஆசிரியர்கள் மதிய உணவுக்கு வெளியே சென்றிருந்த போது அவர்களது கழிவறைகளை மாணவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இதையறிந்த ஆசிரியர்கள் ஆத்திரத்தில், மாணவர்கள் ஒருவருக்கொருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்ற வேண்டும் என்று தண்டனை கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாணவர்களின் கைகளில் காயங்கள் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் கல்வித்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி, மாணவர்கள் கையில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தண்டித்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை, விரிவுரையாளர் மற்றும் ஆசிரியை ஒருவர் உள்ளிட்டோர் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கோண்டகான் மாவட்ட கல்வி அதிகாரி மதுலிகா திவாரி கூறுகையில், "ஐந்து மாணவர்களின் உள்ளங்கையில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. 25 மாணவர்கள் பாதிக்கப்படவில்லை. பள்ளியில் இருந்து 3 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three teachers suspend for punishment to students in chateesgarh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->