தீபாவளி பண்டிகை - ரயில்களில் இன்று தொடங்குகிறது டிக்கெட் முன்பதிவு.! - Seithipunal
Seithipunal


இந்திய ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் 31ம் தேதி வருகிறது. இதனால், அக்டோபர் 28, 29, 30 உள்ளிட்ட தேதிகளில், வெளியூர்களில் தங்கி படிக்கும், வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவர்.

அதன்படி, அக்டோபர் 28ல் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும், அக்டோபர் 29ல் பயணம் செய்ய விரும்புவோர் நாளையும், அக்டோபர் 30ல் பயணம் செய்ய விரும்புவோர் நாளை மறுநாளும் பயணசீட்டு முன்பதிவு செய்யலாம்.

இதுதொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: "பெரும்பாலான பயணியர், இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர்.

இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.தீபாவளி முன்பதிவுகளை கணக்கிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து, ரயில்வே மண்டலங்கள் முடிவு செய்யும்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ticket booking in train for deepavali festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->