விஜய்க்கு கடும் நெருக்கடி! அவர் பேசியது உண்மைதான் - கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி!
ADMK KP Munusami say about TVK Vijay
2026 தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையேதான் போட்டி என நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, "விஜய் சரியாகத்தான் கூறியுள்ளார்" என கருத்து தெரிவித்துள்ளார்.
"திமுக ஆட்சியில் விஜய் தனது படங்களை வெளியிட பெரும் சிரமத்தை சந்தித்தார். அவரது மனதில் பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் இந்த கருத்து," என அவர் தெரிவித்தார்.
மேலும், "விஜயின் படங்களை விநியோகிக்க, திமுக நிர்வாகத்துக்கு அனுசரணை வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் விஜயின் மனதில் ஆத்திரமும் வேதனையும் பெருகியது" என்றார்.
"விஜயின் கருத்து அரசியல் நோக்கில் வெளிவந்ததல்ல. ஆனால், திமுக ஆட்சியில் அவர் சந்தித்த துன்பத்தினால், தனது வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்," கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK KP Munusami say about TVK Vijay