சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி சம்பவம்! ஜடேஜா புதிய சாதனை! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2024 சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் ஆர்சிபி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. பின்னர் சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆர்சிபி முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஜடேஜாவின் புதிய சாதனை

சென்னை தோல்வி கண்டிருந்தாலும், ஜடேஜா ஐபிஎல்லில் யாரும் செய்யாத ஒரு முக்கிய சாதனையைப் படைத்தார். நேற்றைய போட்டியில் 19 பந்தில் 25 ரன்கள் அடித்த ஜடேஜா, ஐபிஎல் வரலாற்றில் 3,000 ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகளை முடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்லில் 1000+ ரன்கள் & 100+ விக்கெட்டுகள் பெற்ற வீரர்கள்:

ரவீந்திர ஜடேஜா – 3,001 ரன்கள், 160 விக்கெட்டுகள்

ஆண்ட்ரே ரசல் – 2,488 ரன்கள், 115 விக்கெட்டுகள்

அக்சர் படேல் – 1,675 ரன்கள், 123 விக்கெட்டுகள்

சுனில் நரைன் – 1,578 ரன்கள், 181 விக்கெட்டுகள்

டுவைன் பிராவோ – 1,560 ரன்கள், 183 விக்கெட்டுகள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL IPL 2025 Ravindra Jadeja CSK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->