திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருட சேவை ரத்து: காரணம் என்ன?
tirupathi temple pournami garuda seva cancelled
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று தங்க கருட வாகன சேவை நடைபெறுகிறது. தற்போது ஆதித்யாயன உற்சவம் நடைபெறுவதால் இன்று நடைபெற இருந்த கருட வாகன சேவை ரத்து செய்யப்பட்டது.
இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தது. திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபத்தை எடுத்துவிட்டு புதியதாக ரூ. 6 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் மற்றும் தேவஸ்தானத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
tirupathi temple pournami garuda seva cancelled