"ரயிலில் உட்கார 'சீட்' பிடிப்பதற்கு இது நல்ல 'டெக்னிக்கா' இருக்கே"! வைரலாகும் காணொளி ! - Seithipunal
Seithipunal


மும்பையின் லோக்கல் ட்ரெயினில்  இருக்கைக்காக பெண் ஒருவர் ஆணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையின் உள்ளூர் போக்குவரத்து பெரும்பாலும் லோக்கல் ரயில்களை சார்ந்தே இருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் தங்களது அலுவலகம், கல்லூரி,பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்வதற்கு எலக்ட்ரிக் ரயில்கள் மற்றும் லோக்கல் ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக மும்பையில் எல்லா ரயில்களிலும் அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்ததாகவே இருக்கும். அதேபோன்ற ஒரு லோக்கல் ரயிலில் ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆணிடம் பெண் ஒருவர் அந்த இருக்கைக்காக கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி தான் தற்போது வைரலாகி வருகிறது.

அந்தக் காணொளியில் ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அந்த ரயிலில்  ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆணுடன் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த நபரை அவரது இருக்கையிலிருந்து எழுந்து நிற்கச் சொல்கிறார் பின்னர் ரயிலிலிருந்து வெளியே செல்லுமாறு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த நபருக்கு இந்தப் பெண் ஏன் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் என்று புரியவில்லை. இந்த காணொளி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to grab a seat in a mumbai local train a woman engaged in heated argument with a man vifeo goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->