3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே மத்திய அரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி டெல்லியை சேர்ந்த வக்கீல் விஷால் திவாரி என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், "பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கத்தில் இருந்த சமயத்தில் எந்த விவாதமும் இல்லாமல் புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆகவே அவற்றின் நம்பகத்தன்மையை மதிப்பிடும் ஒரு நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான பொதுநல வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் உள்ளிட்டோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing 3 new criminal laws against case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->