தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு எதிரான வழக்கு - இன்று வெளியாகப்போகும் முக்கிய முடிவு.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி இந்தியாவின் 26-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் பெயரை அறிவித்துள்ளது. 

இதையடுத்து இன்று முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு புதிய சட்டம் இயற்றப்படும்வரை, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் அடங்கிய குழு, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி, கடந்த ஆண்டு இரண்டு தேர்தல் ஆணையர்களும், நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மேற்கண்ட சட்டம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்குர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த மனுக்கள், இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today hearing election commissioner appoit against case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->