சிவமொக்கா விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!!
Today PM Modi inaugurates sivamokka airport
கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரை ஒட்டிய சோகானே பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை இன்று 27ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் பல வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சிவமொக்கா விமான நிலையத்திற்கு முன்னாள் கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்.
662.38 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ஓடுபாதை, முனைய கட்டிடம், ஏடிசி கோபுரம் மற்றும் தீயணைப்பு நிலைய கட்டிடம் தவிர, இது ஒரு டாக்ஸிவே, ஏப்ரான், அணுகுமுறை சாலை, புற சாலை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டிடம் ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளைக் கையாள முடியும் என்றும், இந்த விமான நிலையம் சிவமொக்கா மற்றும் மல்நாடு பகுதியில் உள்ள மற்ற அண்டை பகுதிகளின் இணைப்பு மற்றும் அணுகலை மேம்படுத்தும் என்று அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும், விமான நிலையம் அமைந்துள்ள பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், சிவமொக்கா விமான நிலையம் வர்த்தகம், இணைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Today PM Modi inaugurates sivamokka airport