சிபிஐ-யின் வைர விழா.. பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்...!
Today PM Modi to inaugurate CBI diamond jubilee celebrations
மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) வைர விழாவை இன்று (ஏப்ரல் 3 ஆம் தேதி) மதியம் 12 மணியளவில் டெல்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் நிகழ்ச்சியின்போது, சிறப்பு சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கான தங்கப் பதக்கம் ஆகியவற்றைப் பெறுபவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிபிஐயின் வைர விழா கொண்டாட்ட ஆண்டைக் குறிக்கும் தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தை அவர் வெளியிடுகிறார். இதையடுத்து சி.பி.ஐ.யின் 'டுவிட்டர்' கணக்கையும் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் திறந்து வைக்கிறார்.
கடந்த 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் சிபிஐ நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Today PM Modi to inaugurate CBI diamond jubilee celebrations