பரபரப்புக்கு மத்தியில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடர்.! அரசியல் பற்றி பேச வாய்ப்பா? - Seithipunal
Seithipunal


நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்தக் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த பிரச்சனை குறித்தும் விவாதிக்க தயார் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

வருகிற ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று துவங்கி, வருகிற 9ம் தேதி வரை நடக்க உள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. 

இது இந்த மக்களவையின் கடைசி மற்றும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதால் இந்த கூட்டத்தொடரில் அரசியல் ரீதியிலான விவாதங்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், அதன் மீது பிரதமரின் நன்றி உரை ஆகியவையே, இந்தக் கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று தெரிவித்தார். 

கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்ற பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள், இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆளுநர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today start budget 2024 meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->