இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு.! - Seithipunal
Seithipunal


இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வுபெறுகிறார். இதனை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. அந்த விழாவில் அவர் பேசியதாவது: 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை, மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் நான் வக்கீலாக பணிபுரிந்தபோது அவருடைய தந்தையான உச்சநீதிமன்றத்தின் 16-வது தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் முதன்முதலில் முறையிட்டது தற்போது நினைவுக்கு வருகிறது. 

இந்த உச்சநீதிமன்றத்தில் என்னுடைய 37 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை  கழித்துள்ளேன். எனது பதவி காலத்தில் ஒரே நேரத்தில் மூன்று அரசியல் சாசன அமர்வு செயல்பட்டது மிகவும் மகிழ்ச்சியான மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். இதுவரை என்னால் முடிந்ததை வழக்கறிஞர்களுக்கு செய்துள்ளேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன் என்றுத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அன்று மாலையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பிரிவுபசார விழாவில் பேசிய யு.யு.லலித் தெரிவித்ததாவது, "எனது 74 நாட்கள் பதவிக்காலத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். ஆறு அரசியல் சாசன அமர்வுகளை அமைத்துள்ளேன். எனது பணி மனநிறைவை தந்துள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today supreme court judge u.u. lalith Retired


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->