சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையில் மாற்றம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.!
Toolgate fees method change for GPS controlling
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களில் பயணிப்பதற்காக குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதனை வசூலிப்பதற்காக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிளுக்கு கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்தியாவில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதிலும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தற்போது சுங்க வருவாய் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இனி GPS கருவி மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், வாகனங்கள் செல்லும் தூரத்திற்கு ஏற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த முறைக்கான பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த 6 மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Toolgate fees method change for GPS controlling