வரதட்சனை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்து கொல்ல முயற்சி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் வரதட்சனை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் நகர் சிப்பினகட்டியை சேர்ந்தவர் ஆயிஷா. இவரது கணவர் முஜாமீல் கான். ஆயிஷாவுக்கு அவரது பெற்றோர் வரதட்சணையாக 350 கிராம் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை கொடுத்தனர்.

இருப்பினும் கடந்த சில நாட்களாக முஜாமீல் கான், ஆயிஷாவிடம் மேலும் வரதட்சணை கேட்டு சித்திரவதைப்படுத்தி வந்துள்ளார்.

மேலும் வரதட்சணையை பெற்றோரிடம் கேட்க ஆயிஷா மறுப்பு தெரிவித்ததால் முஜாமீல் கான் மற்றும் அவரது தாயார் பரிதானந்த், சகோதரர் சாதாத் கான் ஆகியோர் சேர்ந்து ஆயிஷாவிற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி, நேற்று 3 பேரும் சேர்ந்து ஆயிஷா தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதையடுத்து இவர்களின் கொடுமையை தாங்க முடியாத ஆய்ஷா, இதுகுறித்து ஹாசன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் மூன்று பேரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Torture and try to kill the young woman for asking for dowry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->