உ.பி.யில் சுங்கச் சாவடியை இடித்துச் சென்ற டிராக்டர்கள்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
Tractors demolished tollbooth in U.P
சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக தடுப்பு போடப்பட்டிருந்ததை உடைத்துக் கொண்டு, டிராக்டர்கள் வேகமாக சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம், மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சையான் அருகே சுங்கச் சாவடி அமைந்துள்ளது. இந்த நிலையில், சுங்கச் சாவடிக்கு நேற்று காலை 5 மணியளவில் மணல் ஏற்றப்பட்ட டிராக்டர்கள் வந்துள்ளன.
அப்போது, சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக தடுப்பு போடப்பட்டிருந்ததை உடைத்துக் கொண்டு டிராக்டர் சென்றுள்ளன. பின்னர் இதனைத் தொடர்ந்து வந்த 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வேகமாக சென்றுள்ளது.
சுங்குச்சாவடியை உடைத்துக் கொண்டு டிராக்டர்கள் வேகமாக சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் செளத்ரி தெரிவித்ததாவது,
"கடந்த வாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 51 மணல் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் காரணமாக, நேற்று டிராக்டர்கள் சுங்கச் சாவடியில் நிற்காமல் தடுப்புகளை இடித்துக் கொண்டு சென்றிருக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும்". என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tractors demolished tollbooth in U.P