பனிமூட்டம் : உ.பியில் ரெயில் சேவைகள் தாமதம்.! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை முதல் மிககனமழை வரை பெய்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் இன்று வட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பனிமூட்டத்தின் காரணமாக ஏறக்குறைய இருபத்தாறு ரெயில்கள் காலத் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

மேலும், பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் பெரும்பாலான ரெயில்கள் சுமார் ஆறு மற்றும் ஏழு மணிநேரம் தாமதமாக இயக்கப்படுவதாகவும், சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து முன்னதாகவே மக்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பனிமூட்டம் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train service delay for heavy snow fall in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->