ஊழல் வழக்கில் சிக்கிய ''திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்'': அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

சுமார் 17 மணிநேரம் நடந்த சோதனைக்கு பிறகு நேற்றிரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சங்கர் ஆத்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் செல்ல விடாமல் அவரது ஆதரவாளர்கள் கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். 

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த சி ஆர் பி எஃப் வீரர்கள் ஆதரவாளர்களை விரட்டி அடித்த பிறகு சங்கர் ஆத்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள், 24 பர்கானஸ் மாவட்டத்தில் சங்கர் ஆத்யா மற்றும் ஷேக் ஷாஜகான் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்த சென்றபோது மர்ம கும்பல் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamool congress leader arrested ration scam case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->