திரிபுரா தேர் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திரிபுரா தேர் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.!!

திரிபுரா மாநிலத்தில் உள்ள குமார்காட் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஜெகந்நாதர் கோயிலில் கடந்த பத்து நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. அந்த வகையில் நேற்று மாலை தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது. அப்போது தேரின் மேல்பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. 

இதில் தேர் முழுவதும் மின்சாரம் பயந்து தேரை வடம்பிடித்து இழுத்த மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவருக்கும் மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும். தேவைப்பட்டால் சிறந்த சிகிச்சைக்காக அவர்கள் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த விபத்து குறித்து உனாகோட்டி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும், இந்தத் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், 60 சதவீதம் தீக்காயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், 40 முதல் 60 சதவீதம் காயமடைந்தவர்களுக்கு ரூ.75 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tripura govt financial announce for died family in chariot accudent


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->