இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல்.! தீவிர பாதுகாப்பில் மொரிஷியஸ்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில், சர்வதேச விண்வெளி மையம் இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகி உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது. பெருங்கடலில் உருவாகியுள்ள இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கி நகர்ந்து செல்கிறது.

இந்த நிலையில், இன்று இந்த புயல் மொரிஷியசை தாக்கும் என்றும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளது என்றும் அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.

இந்த சூறாவளி புயலால் மொரீஷியஸில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளும் தயார் நடவடிக்கையில் உள்ளன. 

இதற்கிடையே புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வீடியோவாக பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tropical cyclone in indian ocean international space station info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->