கல்லூரி விடுதி கழிவறையில் கழுத்தில் காயத்துடன் பிணமாக கிடந்த மாணவி அனிதா.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருப்பதி அருகே தனியார் கல்லூரியின் விடுதியில், மாணவி ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம் : வி.கோட்டா அடுத்த அரிமாகுலபள்ளி பகுதியை சேர்ந்த அனிதா என்ற 20 வயது கல்லூரி மாணவி, திருப்பதி- சந்திரகிரி இடையே தாடிதோப்பு என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு விடுதிக்கு வந்த மாணவி அனிதா, திடீரென மாயமானார். மாணவி அனிதாவை கல்லூரி காப்பாளர் உள்ளிட்ட சக மாணவிகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கல்லூரி விடுதியின் ஒரு கழிவறையின் கதவு மட்டும் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதிக் காப்பாளர் மற்றும் மாணவிகள் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, மாணவி அங்கே உள்ளே பிணமாக கிடந்துள்ளார். 

அவரது கழுத்தில் காயம் இருந்து இருப்பதை கண்ட மாணவிகள், அவரை யாராவது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று எண்ணி, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்தார்களா? இல்லை கொலை செய்துவிட்டு குளியலறையில் பிணத்தை வைத்து சென்றார்களா? வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதி காப்பாளர், கல்லூரி மாணவிகள் இடமும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trupathi college girl mystery dead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->