ஆளும் கட்சிக் கூட்டத்தில் கறிச் சோறுக்கு தட்டுப்பாடு! கறி குழம்பு அண்டாவை தூக்க அடிதடியில் இறங்கிய கட்சி தொண்டர்கள்.!
tusle in the ruing party meeting in telengana police n action
கறி விருந்திற்காக தெலுங்கானாவின் ஆளும் கட்சி தொண்டர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் அந்த கட்சியின் பொதுக்கூட்டம் தெலுங்கானாவின் சிரோலு என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏராளமான தொண்டர்கள் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.
இந்த மாநாட்டை முன்னிட்டு அதில் கலந்து கொண்டவர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சாகமான தொண்டர்கள் கறி விருந்தில் கலந்து கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்த அளவை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதிகமான தொண்டர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. இதனால் உணவிற்காக அவர்கள் ஒருவர் ஒரு வருஷம் டைப் கொண்டிருந்தனர். மேலும் ஒரு சிலர் கறி குழம்பிருந்த அண்டாவை தனியாக நகர்த்திச் சென்றனர். இவ்வாறு கட்சிக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சண்டையிட்டு கொண்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
English Summary
tusle in the ruing party meeting in telengana police n action