மாலத்தீவுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும்.. ஜெய்சங்கர் மீண்டும் உறுதி!  - Seithipunal
Seithipunal


இந்தியா-மாலத்தீவு இடையிலான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கூட்டுப் பார்வையை நனவாக்குவதில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதியுடன் இருக்கிறார் என மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா கலீல் தெரிவித்தார்.

அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா கலீல் 
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். முன்னதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அவரை வரவேற்றார்.பின்னர் இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேசினர்.அப்போது, இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

அதன் பின்னர் இதுதொடர்பாக அப்துல்லா கலீல் தெரிவிக்கையில் , இந்தியா-மாலத்தீவு இடையிலான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கூட்டுப் பார்வையை நனவாக்குவதில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதியுடன் இருக்கிறார் என கூறினார் .

அதன்பின் நடந்த கூட்டத்தில் பேசியஇந்திய  வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளதுஎன்றும்  பல்வேறு துறைகளிலும் எங்கள் உறவை வலுப்படுத்தி உள்ளோம் எனவும் மாலத்தீவுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும் என கூறினார் . மேலும் பேசிய அவர் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசு கொள்கையின் உறுதியான வெளிப்பாடாக மாலத்தீவு திகழ்கிறது என ஜெய்சங்கர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India will always stand by Maldives Jaishankar reaffirmed 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->