விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி சிறுமி மர்ம மரணம்! அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்! 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் (செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலை) UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி (4 வயது) கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த  சம்பவம் பெரும்  சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் வழங்கவில்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், சிறுமி மதியம் 2 மணிக்கு ரெஸ்ட் ரூமுக்கு சென்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தாலும், சிசிடிவி காட்சியில் சிறுமியை தூக்கிச் செல்லும் நேரம் 1.50 எனக் காட்டுகின்றது.  

சிறுமியின் ஆடைகள் நனைந்ததாற்கான அடையாளம் இல்லை என்றும், கழிவுநீர் தொட்டி மூடியை இபோது உடைத்து போல் உள்ளதாகவும், சிறுமியை கொலை செய்துவிட்டு பின்னர் அதனை மறைக்க, கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துவிட்டதாக நாடகம் நடத்தப்படுவதாகவும். இதனை தீர விசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் மற்றும், சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்த காணொளி: நன்றி பாலிமர் செய்திகள்!

இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, தாளாளர் எமால்டா, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi Private School Child dies police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->